கும்பகோணம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலி

கும்பகோணம் அருகே கார் மோதியதில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலி
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே செட்டி மண்டபம் வெங்கடேசன் நகரை சேர்ந்தவர் மகாதேவன் மகன் சுபாஷ்(வயது17). அப்பகுதி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் வந்துள்ளார். அப்போது நால்ரோடு அருகே பின்னால் வந்த கார் சுபாஷ் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய சுபாஷ் முன்னால் வந்த அரசு விரைவு பஸ் முன்பு விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர் சுபாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com