மகாராஷ்டிரா: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

மகாராஷ்டிர மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்தில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 13 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
Published on

கோலாப்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் கடற்கரை நகரமான ரத்னகிரியில் இருந்து கோலாப்பூர் நோக்கி நேற்று நள்ளிரவில் ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. அதில் புனேயைச் சேர்ந்த 16 பேர் பயணம் செய்தனர்.

இந்த பஸ் இன்று அதிகாலையில் கோலாப்பூர் பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், பஞ்சகங்கா ஆற்றுக்குள் தலைகீழாக விழுந்தது. இதில் பஸ் கடுமையாக சேதடைந்தது. பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூக்குரலிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையாக வழங்கப்பட வேண்டும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com