தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ் இயக்கம்: டயரில் காற்றை பிடுங்கி விட்ட தொழிலாளர்கள்

கோத்தகிரியில் தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்சை இயக்கியதால் அரசு பஸ் டயரில் காற்றை பிடுங்கி விட்டு இயங்க விடாமல் தொழிலாளர்கள் தடுத்தனர்.
தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ் இயக்கம்: டயரில் காற்றை பிடுங்கி விட்ட தொழிலாளர்கள்
Published on

காந்தல்:

தமிழகம் முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை இல்லாததால் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன் படி இன்று காலை கோத்தகிரியில் இருந்து தற்காலிக டிரைவர் மூலம் பஸ்கள் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் வந்தனர்.

அவர்கள் பஸ் டயரின் காற்றை பிடுங்கி விட்டு பஸ்களை இயங்க விடாமல் தடுத்தனர். அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து தற்காலிக காற்றடிக்கும் பம்ப் மூலம் டயர்களில் காற்றை நிரப்பி பஸ்களை இயக்க செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com