தம்பி மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் கைது

தேனியில் தம்பி மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தம்பி மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் கைது
Published on

தேனி:

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவரது அண்ணன் சரவணன் (வயது 40). அடிக்கடி தம்பி மனைவியிடம் சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று குடிபோதையில் தம்பி வீட்டுக்கு சென்ற சரவணன் அவரது மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com