தொட்டியத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்

தோளூர்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க முறைகேடுகளை கண்டித்து தொட்டியம் தாலுக்கா அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தொட்டியத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து தொட்டியம் தாலுகா அலுவலகம்  முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு  மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். 

மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 2015- ஆம் ஆண்டுக்கு பிறகு சங்கத்திற்கு பால் வழங்கும் புதிய உறுப்பினர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும், தோளூர்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2013முதல் 2018 வரை நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கறவை மாடு இல்லாத உறுப்பினர்கள் பெயரில் வேறு நபர்கள் பால் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றியத் தலைவர் முத்துக்குமார், நகர தலைவர் தனபால், கட்சி நிர்வாகிகள் தோளூர் பட்டி ராஜசேகர், ராமா னுஜம், செல்லையா, காட்டுப்புத்தூர் தனுசு தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com