புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ. 5 லட்சம் பரிசு

புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு பெங்களூரு மாநகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் இன்று பரிசாக அளிக்கப்பட்டது.
புத்தாண்டு நள்ளிரவில் பிறந்த பெண் குழந்தைக்கு ரூ. 5 லட்சம் பரிசு
Published on

பெங்களூரு:

பெங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு பெங்களூரு நகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூரு பெருநகர மேயர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு நகரை சேர்ந்த புஷ்பா - கோபி தம்பதியருக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற பெங்களூரு பெருநகர மேயர் சம்பத் குமார், முன்னர் வாக்களித்தபடி, பிறந்த குழந்தை மற்றும் அதன் தாயார் புஷ்பா பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி வாழ்த்தினார்.

புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததன் மூலம் பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறக்கும் வாய்ப்பு இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com