துப்புரவு பணிக்கான 2வது நாள் நேர்காணல் - பி.இ., பி.டெக்., ஏரோ நாட்டிக்கல் பட்டதாரிகள் குவிந்தனர்

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான 2வது நாள் நேர்காணலுக்கு பி.இ., பி.டெக்., ஏரோ நாட்டிக்கல் பட்டதாரிகள் குவிந்தனர்.
நேர்காணலுக்கு வந்த பெண்கள்
நேர்காணலுக்கு வந்த பெண்கள்
Published on

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் மட்டுமே போதும். சம்பளம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு பலர் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் செய்தனர். சுமார் 7 ஆயிரம் பேர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நேர்காணல் முகாமிற்கு அழைக்கப்பட்டனர். அதில் முதல் நாளான நேற்று (27-ந்தேதி) சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாநகராட்சி கமி‌ஷனரும், தனி அலுவலருமான ஷ்வரன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 27-ந்தேதி முதல் நாளை (29-ந்தேதி) வரை 3 நாட்கள் நேர்காணல் நடைபெறுகிறது.

27 மற்றும் 28-ந்தேதிகளில் நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் நாளை (29-ந்தேதி) மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com