அவனியாபுரம் பகுதியில் 9-ந்தேதி மின்நிறுத்தம்

மதுரை அவனியாபுரம் பகுதியில் வருகிற 9-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.
மின்தடை
மின்தடை
Published on

மதுரை:

மதுரை அவனியாபுரம் பகுதியில் வருகிற 9-ந்தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மேற்கு மின்வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம்.சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத்சிட்டி, பை- பாஸ் ரோடு முழுவதும், மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகைவீடுகள், பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும்.

திருப்பதி நகர் முழுவதும், அண்ணா நகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி. நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com