ஆரணி கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனையா?: அதிகாரிகள் ஆய்வு

ஆரணி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில் கடைகளில் மாவட்ட உணவுபாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆரணியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
ஆரணியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
Published on

ஆரணி:

ஆரணி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில் கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் மாவட்ட உணவுபாதுகாப்பு அலுவலர் செந்தில் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர்.எஸ்.பாபு, ரவி ஆகியோர் ஆரணி நகரில் உள்ள முட்டை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முட்டைகளை உடைத்து பார்த்து சோதனை செய்தனர்.

ஆரணி கடைகளில் பிளாஸ்டிக் முட்டைகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com