அன்னவாசல் அருகே சூதாடிய 8 பேர் கைது

அன்னவாசல் அருகே சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் போலீசார் வீரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரப்பட்டி தம்புரான்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய காலாடிப்பட்டியை சேர்ந்த அரும்பு சுப்பையா (வயது 40), இலுப்பூரை சேர்ந்த செல்வராஜ் (39), பின்னங்குடியை சேர்ந்த மதிவாணன் (50), அன்னவாசலை சேர்ந்த அடைக்கலம் (37), இலுப்பூரை சேர்ந்த ஜாகிர்உசேன் (44), ராசிபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40), கொன்னப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (23), தொட்டியம்பட்டியை சேர்ந்த ராமநாதன் (55) ஆகிய 8 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com