அன்னவாசல் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

அன்னவாசல் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ்(வயது 50). கூலித் தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் சென்று சந்தையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வாதிரிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். காலாடிப்பட்டி அருகே அவர் வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த காமராஜ், சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார், பஸ் டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம்(39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com