தருமபுரியில் மது விற்ற 2 பேர் கைது

தருமபுரியில் கள்ளத்தனமாக மது பாட்டிலை வீட்டில் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரியில் மது விற்ற 2 பேர் கைது
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் போலீசார் அரசுக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது பாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து விற்பவர்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு பகுதியை சேர்ந்த பழனி (வயது 25) என்பவர் கள்ளத்தனமாக மது விற்றதன் பேரில் கைது செய்யப்பட்டார். 

மேலும் இவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த சின்னப் பையன் (55) என்பவரை கள்ளத்தனமாக மது விற்றதன் பேரில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com