

தென்காசி:
தென்காசி சுவாமி சன்னதி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அலி ஜின்னா. இவருடைய மகன் முகமது உசாம் (வயது 18). இவர் பிளஸ்-2 படித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாடிப்பகுதியில் உள்ள மின் ஒயரில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தென்காசி போலீசார் விரைந்து சென்று, இறந்த முகமது உசாமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.