கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
கோவையில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம் பாளையம் அடுத்துள்ள சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவசாமி. பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி முருகசுந்தரி.

இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். மூத்த மகள் காவியா 11-ம் வகுப்பும், இளைய மகள் சந்தியா (வயது 14), 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

சந்தியா கண்ணப்ப நகரிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகசுந்தரி தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து சத்தம்போட, அருகில் இருந்தவர்கள் மற்றும் சிவசாமி ஆகியோர் வந்து பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளியில் இருந்து வந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com