மகாராஷ்டிரா உள்பட ஏழு மாநிலங்களின் கொரோனா அப்டேட்ஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 898 பேர் உயிரிழந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 372 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் இன்னும் முதலிடம் வகிக்கிறது. இன்று அம்மாநிலத்தில் 54,022 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 898 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 28076 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 12064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 11708 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்தரகாண்டில் 9642 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 19216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் 38460 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தில் 50 ஆயிரத்தை நெருங்கியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com