காவேரிபட்டணம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது

காவேரிபட்டணம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.
சூதாட்டம்
சூதாட்டம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில்  ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாடியதைக் கண்டு அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், காவேரிபட்டணம், சண்முகசெட்டி தெருப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(24), அஜித்குமார் (24), கார்த்திக்(25), சாரதி(18) என்பதும், பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைதுசெய்து அவர்களிடம் இருந்த பணம் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com