தமிழகத்தில் இன்று புதிதாக 23,310 பேருக்கு கொரோனா தொற்று: 167 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று 23 ஆயிரத்தை கடந்து 23,310 ஆக உயர்ந்துள்ளது. இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 12,72,602 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11,29,512 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1,28,311 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 14,779 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1,55,382 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1,48,695 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com