

உற்சாகத்துடன் செயல்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வரவு திருப்தி தரும். பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
வளர்ச்சி கூடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உருவான தொல்லை அகலும்.
அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
பயணம் பலன் தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வர். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும்.
வரவைவிட செலவு கூடும் நாள். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய வேலையை நம்பி பழைய வேலையை விடவேண்டாம்.
வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.