சனிப் பெயர்ச்சியின் போது 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு
சனி பகவான் மார்ச் 29-ந் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.
நவக்கிரகங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடியது சனி கிரகம் என்பதோடு, அவர் கர்ம காரகன், நீதிபதி போன்று செயல்படுவதால். சனிப் பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய தற்போதைய சனிப்பெயர்ச்சி பரிகார விபரம் :-
அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.
முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத் தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.
முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும். வேப்பி லையை அருகில் இருக்கும் புற்று அம்மன் கோவி லுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
தினமும் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்து வரவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமை 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.
குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
துர்க்கை அம்மனை செவ்வாய்க் கி ழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
வியாழக்கிழமைகளில் குருவை வழிபடவும்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை 'பைர வாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.