இந்த 5 காரணங்களுக்காக குழந்தை பெறுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!
1. "பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள்"
பெற்றோர் விருப்பம், மாமியார் கேட்டார் என ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எப்போது விருப்பமோ, அப்போது குழந்தை பற்றி யோசியுங்கள்.
2."எங்களை நெருக்கமாக்கும் என்று நினைத்தோம்"
பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள்.
பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலுங்கள். அதைவிடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, நெருக்கம் இல்லாமல் உங்கள் நிலையை இன்னும் மோசமாக்கி கொள்ளாதீர்கள்.
3. ஆண், பெண் என்பதை நிரூபிக்க...
உன்னால் குழந்தை பெத்துக்க முடியாது என பெண்களையும், நீயெல்லாம் ஒரு ஆணா என கணவன்மார்களையும் விமர்சிக்க தொடங்குவர்.
இந்த பேச்சுகளை நினைத்து பயம்கொண்டே உங்களுக்கு வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் அப்படி செய்யாதீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும் சமூகம் பேசும். அதனால் உங்கள் கடமைகளை நிறைவேற்றிவிட்டு குழந்தைக்கு நீங்கள் தயார் எனும்போது பெற்றுக்கொள்ளுங்கள்.
4. "மற்ற குடும்பங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை"
உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் "நல்ல செய்தி" இருக்கா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது.
குழந்தை பெற வேண்டுமானால் நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
5. "நான் பெறாத விஷயங்கள் என் குழந்தைக்கு கிடைக்கவேண்டும்"
நீங்களாக விருப்பப்பட்டு ஒரு குழந்தை பெறும்போது அதற்கு உங்களின் அனைத்துவிதமான அன்பும் கிடைக்கும்.
நாம் திட்டமிட்டு நடத்துவதைவிட, எதிர்பாராமல் கிடைப்பதில்தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.