பசி,காற்று புகுதல்,அசௌகரியம், சோர்வு, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது
குழந்தைகள் பொதுவாகவே ஒருநாளைக்கு 3 மணிநேரத்திற்கும் மேல் அழுவார்கள்!
குழந்தையை எப்படி அமைதிப்படுத்துவது?
குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைக்காமல், கையில் தூக்கி விளையாட்டு காட்டுங்கள். மார்போடு அணைத்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்ய, மென்மையான குரலில் பாட்டு பாடலாம். அல்லது அமைதியாக பேசலாம்.
வெந்நீரில் குளிப்பாட்டுங்கள்.
எப்போதும் இல்லாமல் வித்தியாசமாக அமைதியாக பேசுவது அவர்களின் கவனத்தை ஈர்க்கும். அழுகையை மறக்கச்செய்யும்.
பால் கொடுத்து பாருங்கள். பசியாக இருந்தால் அழுகை நின்றுவிடும்.
மடியில் குப்புற படுக்க வைத்து முதுகை லேசாக தடவிக்கொடுத்து பாருங்கள்.
சாப்பிடும்போது அல்லது பால் குடிக்கும்போது காற்று புகுந்திருந்தால் அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அப்போது அவர்களை ஏப்பம்விட வையுங்கள். காற்று வெளியே வந்தால் நன்றாக உணர்வார்கள்.
குழந்தையின் துணி ஈரமாக, அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.