நமக்கு A,B, AB,O. என்று 4 முக்கிய ரத்த வகைகள் உண்டு.
ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம், அறுவை சிகிச்சைகளின்போதும் மற்றும் விபத்தில் ரத்தம் இழப்பவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் போதும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.
அப்பொழுது எந்த ரத்த வகை உள்ளதோ அவருடைய ரத்தம்தான் அதே ரத்த வகை உள்ளவருக்கு சேரும்.
அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், மற்றும் தானம் செய்கிறவர் என இருவரின் ரத்த வகையும் தெரிந்திருக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் எடுக்கும்போதும், பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படும்போதும் ரத்த வகையைக் குறிப்பிட வேண்டும்.
அப்பொழுது தான் எந்த ஒரு ஆபத்து காலமாக இருந்தாலும் உடனடியாக உதவி செய்ய முடியும்