பழச்சாறு அருந்துபவர்களுக்கு ஏன் அடிக்கடி அதை அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது?
பழச்சாறின் இனிப்பு அதில் உள்ள சர்க்கரையும் ஜிவ்வென்று ரத்தத்தில் க்ளூகோஸை ஏற்றும். இது மூளைக்கு மிகவும் பிடித்த விசயமாகும்.
மூளை இத்தகைய திடீர் க்ளூகோஸ் ஏற்றங்களுக்கு எளிதில் அடிமையாகி விடும்.
இதனால் தான் பழச்சாறு மீதும் இனிப்பான பழங்கள் மீதும் நமக்கு ஆசை ஏற்படுகிறது.
பழங்களில் இனிப்பு குறைந்த பழங்கள் மீது நமக்கு ஆசை தோன்றாமல் இருப்பதற்கு காரணமும் இது தான்.
பழங்களில் உள்ள சத்துக்களுக்காக அதை உண்பவர்களை விடவும் அதன் இனிப்பு சுவைக்காகவும் தித்திப்புக்காகவும் தான் அதிகம் உண்கின்றனர்.
பழங்களில் இனிப்பு குறைவான பழங்களுக்கு மவுசு குறைவு தான். எனினும் நீரிழிவு நோயர்கள் கூட இனிப்பான வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரீச்சம் பழம் என்று உண்பது இதனால் தான்.
இனிப்பான ஆப்பிள் பழத்தில் உள்ள அத்தனை சத்துகளும் இனிப்பு குறைவான கொய்யா காயில் உண்டு.பழங்களில் உள்ள அத்தனை ஊட்டச்சத்துகளும் நன்மைகளும் காய்கறிகளிலும் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும்.
பழங்களை நார்ச்சத்துக்காக சாப்பிடுகிறேன் என்றால் அதே நார்ச்சத்து காய்கறி கீரைகளிலும் உண்டு.அதே பழங்களை பழக்கூழாக்கி பருகும் போது நார்ச்சத்து இன்னும் குறைந்து விடுகிறது.
இதற்கடுத்த படியாக இனிப்பு தித்திப்பு சுவை கொண்ட அனைத்து விசயங்களிலும் நம் மூளை அதற்கு அடிமை என்பதால் வரம்பு மீறினாலும் மூளை கண்டிக்காது.
பழச்சாறு நீர் போல இருப்பதால் சட்டென ஊற்றினால் விரைவில் வயிற்றை விட்டு இறங்கி விடும். இதனால் இண்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்குமே தவிர நீண்ட நேரம் பசி அடங்காது. சீக்கிரமே அடுத்த ஸ்நாக்ஸ் மற்றும் உணவை கேட்கும் சூழல் ஏற்படும் .
குழந்தைகளுக்கு சிறார்களுக்கு வளரிளம் பருவத்தினருக்கு பேக்கரி ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக பழங்களை உண்ணக் கொடுப்பது நல்லது.