பொதுவாக பழங்களில் இனிப்பு சுவை அதிகம். பழங்களுக்கு இனிப்பு சுவை தருவது "சுக்ரோஸ்" ஆகும். சுக்ரோஸுக்குள் இருப்பது ஃப்ரக்டோஸும் க்ளூகோஸும் ஆகும்.
எனவே பழங்களாக சாப்பிட்டாலும் நமது ரத்த க்ளூகோஸ் அளவுகள் கூடும். அதை கட்டுக்குள் வைக்க இன்சுலின் சுரப்பு ஏற்படும்.
இவ்வாறு ஒரு உணவை சாப்பிடும் போது எத்தனை விரைவாக ரத்த க்ளூகோஸை அது ஏற்றுகிறது என்பதை அளவிட GLYCEMIC INDEX எனும் அளவீடு உதவுகிறது.
இனிப்பு சுவை குறைவான பழங்களுக்கு GLYCEMIC INDEX குறைவான அளவில் உள்ளது ( கொய்யா காய், எலுமிச்சை, தேங்காய், நெல்லி காய் , வெள்ளரி காய் , பெர்ரிகள் )
அதுவே இனிப்பு சுவை கூடக் கூட GLYCEMIC INDEX உயர்கிறது ( பேரீச்சம் பழம், மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை)
அதிலும் பழச்சாறாக்கி பருகும் போது GLYCEMIC INDEX இன்னும் உயர்கிறது. எனவே ஒருவர் சீனி/ நாட்டு சர்க்கரை சேர்க்காமல் பழச்சாறு பருகினாலும் அவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதுவே சீனி/ நாட்டு சர்க்கரை கலந்து அடிக்கடி பழச்சாறு பருகுபவர்களுக்கு நீரிழிவு ( Diabetes) ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகிறது.
பழங்களை பழச்சாறாக்கி அடிக்கடி பருகுவது நன்மையன்று. அதிலும் சீனி நாட்டு சர்க்கரை தேன் போன்றவற்றை சேர்த்து பருகுவது நீரிழிவு / ஃபேட்டி லிவர் / பிசிஓடி / உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை வரவழைக்கலாம்.
இண்ஸ்டண்ட் எனர்ஜி பெற வேண்டிய நேரங்களில் பழச்சாறுகள் கை கொடுக்கும். அப்போதும் இனிப்பு கலப்பது நன்மையன்று.
நீரிழிவு நோயர்/ உடல் பருமன்/ பிசிஓடி/ ரத்த கொதிப்பு இருப்பவர்கள் இனிப்பு சுவை கொண்ட பழங்களை தவிர்த்து இனிப்பு சுவை குறைந்த பழங்களை விரும்பிச் சாப்பிடலாம்.
இவர்களுக்கு பழங்களில் உள்ள அத்தனை சத்துகளும் காய்கறிகளிலும் உண்டு. எனவே காய்கறிகள் சாப்பிடலாம்.