ரத்த சோகை, அதாவது இரத்த ஓட்டம் குறைவது, போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாததால் ஏற்படும்.
இது ஊட்டச்சத்து குறைபாடு (இரும்புச்சத்து, வைட்டமின் பி12), இரத்த இழப்பு (அறுவை சிகிச்சை, அதிக மாதவிடாய்), இரத்த சோகைக்கான மரபணு காரணங்கள் (தலசீமியா, அரிவாள் செல் இரத்த சோகை)
சிறுநீரக நோய், எலும்பு மஜ்ஜை கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.
சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்.
நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம். ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம்.
எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால், மீன், முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.
ஒரு சில காய்கறிகள், பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை எனவே இது போன்ற உணவுகளை சாப்பிட்டு வரலாம்.