கோதுமை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவி புரியும் கோதுமை, சருமத்துக்கு நல்ல பொலிவையும் வழங்கும்.
கோதுமை-தேன் பேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -2 டேபிள் ஸ்பூன், தேன்- 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர்- தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியான விழுது போல் கலந்துகொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் முடி வளரும் பகுதிகளில் தடவி, 20-25 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும், கீழிருந்து மேலாக அகற்றவும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கோதுமை மாவு-கடலை மாவு ஸ்கிரப்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன், தயிர் அல்லது பால் - 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, கடலை மாவு மற்றும் தயிர் அல்லது பால் சேர்த்து விழுது போல தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.
பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக முகத்தை 'ஸ்கிரப்' செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த 'ஸ்கிரப்', முகத்தில் வளரும் முடிகளை நீக்குவது மட்டுமின்றி, சருமத்துக்கு நல்ல பொலிவையும் தருகிறது.