சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் பிறப்புறுப்பு பகுதியில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
மலம் கழித்த பிறகு அல்லது சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால் அரிப்பு ஏற்படும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றவேண்டும்.
அதுபோல உடலுறவுக்குப் பிறகும் சுத்தம் செய்யவேண்டும். வியர்வை மற்றும் சிறுநீர், முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா உருவாகி வீக்கத்தை ஏற்படுத்தும்.
இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அது வஜினிடிஸாக உருவாகலாம். அந்த நேரத்தில் பிறப்புறுப்பு பகுதி பச்சை அல்லது மஞ்சள் சளியை சுரக்கக்கூடும்.
மேலும் பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த முடி பிறப்புறுப்பு பகுதியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் முடியை நீக்குவது கீறல்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் அவ்வப்போது முடியை வெட்டிக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்ய சோப்பு அல்லது வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்த ஜெல்களை பயன்படுத்தக்கூடாது. இது பெரும்பாலும் வலுவான காரத்தன்மை கொண்டவை. இது யோனியின் சாதாரண pH அளவை மாற்றி, வறட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கின்றன.
சில ஆய்வுகள் மன அழுத்தமும் பிறப்புறுப்பு அரிப்புக்கு ஒரு காரணம் என கூறுகின்றன. நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம்.
பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளை ஆக்கிரமித்து அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்களில், நாளமில்லா சுரப்பிகள் குறைவதால் யோனி சளிச்சுரப்பி மெல்லியதாகி, பிறப்புறுப்புகள் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது.