விக்கல் ஏற்பட என்ன காரணம்? விக்கலை நிறுத்துவது எப்படி?
மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்). இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும்.
மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது. இந்த தசைப்பகுதி திடீரென விரிந்து சுருங்கும் போது விக்கல் ஏற்படுகிறது.
காரணங்கள்
ஜீரணக் கோளாறு, குறைந்த அளவு புரதச்சத்துள்ள உணவுகள், கொழுப்புச் சத்துள்ள உணவை சாப்பிடுவது, அதிக காரத்துடன் உணவை சாப்பிடுவது, மாவுப் பண்டங்கள் சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது இதனால் தசைப்பகுதி சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.
விக்கலை தடுக்கும் முறைகள்:
மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். இதனால் தான் மூச்சை இழுத்துப் பிடித்தாலோ, தம் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்று விடுகிறது.
தண்ணீரை வேகமாக குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது நாம் மூச்சு விடுவதில்லை. அப்போது உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவதால் விக்கலும் நின்றுவிடும்.
அதிர்ச்சியாக ஏதாவது பேசினால் நாம் திடீரென விக்கித்துப் போய்விடுவோம். அதன் பலனாகவும் விக்கல் நின்று விடும்.
சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனில் சாப்பிட விக்கல் நின்று விடும்.