இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
2k லவ் ஸ்டோரி
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது 2 கே லவ் ஸ்டோரி திரைப்படம். காதல் மற்றும் நட்பை முன்னிலையில் பேசும் திரைப்படமாக அமைந்துள்ள இப்படம் இன்று ஆஹா ஓடிடி-யில் வெளியாகியுள்ளது.
காதல் என்பது பொதுவுடைமை
ஓரினசேர்க்கையாளர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்கள் படும் கஷ்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. இன்று டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
ஃபயர்
பாலாஜி முருகதாஸ் நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். ஃபயர் திரைப்படம் இன்று டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராமம் ராகவம்
நவீன் சந்திரா நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ராமம் ராகவம். முன்னணி கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி நடித்தார். அப்பா மற்றும் மகனின் உறவுமுறையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொன்மேன்
பேசில் ஜோசஃப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன் மற்றும் தீபக் பரம்பொல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Ponman திரைப்படம். இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.