காலையில் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவே நம்மை, நாள் முழுவதும் தேவையற்ற தவறான உணவுகள் எடுத்துக் கொள்வதினை தவிர்க்கும்.
முட்டை- முட்டை உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதனை காலையில் எடுத்துக்கொள்வது சத்தினையும், வயிறு நிறைவான ஒரு உணர்வையும், மதிய உணவு வரை நொறுக்குத் தீனி எடுத்துக் கொள்ளாமலும் வைக்கும்.
மூளை, கல்லீரலுக்கு இது சிறந்த உணவு. புரதம் நிறைந்தது.
தயிர் - புரதம் நிறைந்தது. பசியை கட்டுப்படுத்தும். எடை குறையும். குடலுக்கு மிகவும் சிறந்தது.
ஓட்ஸ்- அநேகர் காலை உணவாக ஓட்சை விரும்புகின்றனர். இதிலுள்ள நார்சத்து உடலுக்கு அநேக நன்மைகளை அளிக்கின்றது. கொலஸ்டிரால் குறையும்.
வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இருதயம், உயர் ரத்த அழுத்த குறைப்பு இவற்றுக்கு பெரிதும் உதவும்.
Chia Seeols- ஒரு அவுன்ஸ் (28 கி) அளவு எடுத்துக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். புரத சத்து அளிக்கும் வீக்கங்களைக் குறைக்கும்.
பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாம்.
பப்பாளி, ஆரஞ்சு, பிளாக்ஸ் விதை, கிரீன் டீ போன்றவையும் காலை உணவில் சேர்த்துக் கொள்ள மூளை, நரம்பு மண்டலம் வலுப்பெறும்.