திருமண நாள் பரிசு... மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்பொழுது ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
vishnuvishal
இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு தற்பொழுது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
vishnuvishal
விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி நட்ராஜ் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு காரணத்தினால் அவரை 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
vishnuvishal
விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ்க்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
vishnuvishal
விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா தம்பதி 4 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
vishnuvishal
அதில் அவர் " நாங்கள் பெண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். ஆர்யன் இப்பொழுது அண்ணனாகி விட்டான்.
vishnuvishal
எங்கள் நான்காவது திருமண நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
vishnuvishal
திரைத்துறை நண்பர்கள் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.