முடி நீளமாகவும், கருமையாகவும் வளர வேண்டுமா? செம்பருத்தி ஆயிலை இப்படி பயன்படுத்துங்க...
செம்பருத்தி மருத்துவ குணம் நிறைந்தது. இதன் மலர் மற்றும் இலை இரண்டுமே தலைமுடிக்கு பல அற்புதங்களைச் செய்யும். தலைமுடியின் வளர்ச்சியில் இருந்து இளநரையைத் தடுப்பது வரை செம்பருத்தியை பயன்படுத்தலாம்.
முடியை வலிமையாக்க:
செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பாஸ்பரம் சத்தும் நிறைந்து இருப்பதால் இவை இரண்டும் சேர்ந்து முடியின் வேர்க்களை உறுதியாக்கும். அதிகமாக வறட்சியடைந்து frizzy ஆக இருக்கும் முடியை மாற்றி வறட்சியைக் குறைக்கும்.
முடி உதிர்வை தடுக்க:
முடியின் வேர்க்களுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கததால் முடியின் வேர்க்களில் பலத்தை இழக்கும்.
இதன் விளைவாக தலைமுடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கும். அதற்கு செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்தினால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் முடி உதிர்வை தடுக்கும்.
இளநரையை மாற்ற:
இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் வயதிலேயே இளநரை பிரச்சினை வந்துவிடுகிறது.
ஒருமுறை வெள்ளை முடி வந்துவிட்டால் அதை மாற்றவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.
முடி பளபளக்க:
தொடர்ச்சியாக செம்பருத்தி எண்ணையை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் அது மிகச்சிறந்த கண்டிஷனராக மாறி இயற்கையாகவே தலைமுடியை வறட்சி இல்லாமல் பளபளவென்று மாற்றும் ஆற்றல் கொண்டது.
முடி வளர்ச்சியை அதிகரிக்க:
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆயில் மசாஜ் மிகச்சிறந்த வழி. செம்பருத்தி எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடிக்கு ஊட்டச்சத்தைக் கொடுத்து சில்க்கியாகவும் மாறும்.
அதிலும் குறிப்பாக செம்பருத்தி ஆயிலை லேசாக சூடு படுத்தி வெதுவெதுப்பான நிலையில் தலையின் வேர்க்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்த செம்பருத்திலுள்ள ஆற்றல் வாய்ந்த அமினோ அமிலங்கள் வேர்க்களை வலுவாக்கி முடியின் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும்.