வால்நட் பருப்புகளை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும், அகலமான நான்-ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். அது உருகியதும் வால்நட்டை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் பாகு தயாரிக்கவும்.
பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி. சுக்கு பொடி மற்றும் வறுத்த வால்நட் பருப்புகளை போட்டு கலக்கவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் இந்தக் கலவை யைப் போட்டு, சமமாக பரப்பி வைக்கவும். அது சற்றே ஆறிய பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இப்போது ஆரோக்கியமான 'வால்நட் பர்பி தயார். அதன் மேலே நெய்யில் வறுத்த வெள்ளை எள் மெல்லியதாக நறுக்கிய பாதாம் போன்றவற்றை அலங்காரமாக தூவலாம்.