கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்களுக்கு உருளைக்கிழங்கு கெடாமல் பிரெஷாக இருக்கும்.
குடிக்கும் நீர் மணமாகஇருக்க வேண்டும் என்றால் வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.
ஆப்பிள் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.
காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.
லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
நெய் காய்ச்சும் போதே வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ளவும். நன்கு ஆறிய பிறகு இந்த கீரையை சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். சப்பாத்தி ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.