கைகளை பயன்படுத்தி செய்யும் செயல்கள், அனுபவங்கள் மூலம் கற்றல், குழந்தைகளுக்கு அறிவாற்றலை மேம்படுத்த உதவும்.
பெற்றோர்கள் குழந்தைகளை கைகளில் எடுக்கும் செயல்களில் ஈடுபடுத்த ஊக்குவிக்கலாம். அது அவர்களின் ஆர்வத்தை தூண்டி மேலும் அறிவில் சிறக்க துணைபுரியும்.
கலை ஆர்வம்:
குழந்தைகளிடம் கலை ஆர்வத்தை தூண்டுவதன் மூலம் அவர்களின் தனித்திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்கலாம்.
மொழிகள்:
குழந்தைகள் சிறிய வயதிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறன் உடையவர்கள். இரண்டு மொழிகளில் பேசுவதன் மூலம் அவர்களின் அறிவாற்றல் அதிகரிக்கும்.
நினைவாற்றல்:
நினைவாற்றல் குழந்தைகளின் கற்றல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தோல்விகளில் இருந்து கற்றல்:
தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, தோல்விகளால் துவண்டுவிடாமல், அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.