சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:
தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
சமச்சீர் உணவை உண்ணுங்கள்:
பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகள், பெர்ரி வகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சருமத்தை சுத்தம் செய்யுங்கள்:
சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தவறாமல் சுத்தப்படுத்துங்கள். வெளி இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் 'ஃபேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவுங்கள்.
வீட்டில் இருக்கும் சமயங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை சுத்தம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.
இறந்த செல்களை அகற்றவும், மென்மையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.