மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி நடிப்பில் வெளியானது நேசிப்பாயா திரைப்படம், இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்க அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்தார்.
இத்திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மரணமாஸ் - Sony LIV
பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படமான மரணமாஸ். அராத்தாக இருக்கும் கதாநாயகன் பசில் ஒரு தொடர்கொலை சந்தேக குற்றவாளியாக இருக்கிறார்.
இவர் ஒரு நாள் பேருந்தில் ஏறி செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இப்படம் வரும் மே 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அமெரிக்கன் மேன் ஹண்ட்: ஒசாமா பின் லேடன் - Netflix
மோர் லவ்ஷி மற்றும் டேனியல் சிவன்ஸ் மூன்று பாக ஆவண தொடராக உருவாக்கியுள்ளனர். ஒசாமா பின் லேடனை அமெரிக்க அரசு எப்படி பிடித்தது என்பதை கூறும் ஆவண தொடராக உருவாகியுள்ளது. இத்தொடர் வரும் மே 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வருணன் - Aha Tamil
கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார்.
தண்ணீர் கேன் சப்ளை செய்யும் இரண்டு கூட்டத்திற்கு நடுவே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களமாகும். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இதில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.
டென் ஹவர்ஸ் - Prime Video
சிபிராஜ் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது டென் ஹவர்ஸ் திரைப்படம். இப்படத்தில் காவல் அதிகாரியாக சிபிராஜ் நடித்து இருந்தார்.
இத்திரைப்படம் ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்துடன் அமைந்து இருக்கும். டென் ஹவர்ஸ் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.
'ஒடேலா 2' - Amazon Prime Video
அசோக் தேஜா தான் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'ஒடேலா 2'. இதில் ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதில் நாம் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'ஜாக்' - Netflix
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ள படம் 'ஜாக்'. பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியானது.
'ல்தகா சைஆ' - Tentkotta
சதா நடார் இயக்கத்தில் வெளியான படம் 'ல்தகா சைஆ'. இதில் மோனிகா சலினா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடப்பதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'ராபின்ஹுட்' - Zee5
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கினார். இப்படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.