கணவன்-மனைவிக்கிடையே நிகழும் நகைச்சுவையான ஈகோ கிளாஷ்கள் கதையாக உருவாகியுள்ளது தலைவன் தலைவி. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மாரீசன் - Netflix
ஒரு திருடன் முதியவரின் சொத்தை அடைய திட்டமிட்டு, அவருடன் செல்லும் ரோடு-ட்ரிப் கதையாக உருவாகியுள்ளது மாரீசன். திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இத்தி ஸி குஷி - Sony LIV
தந்தை மது பழக்கத்திலும், தாய் இல்லாமலும் இருக்கும் சூழலில், தனது கனவுகளை தியாகம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் ஒரு இளம் பெண்ணின் தன்னம்பிக்கை பயணமாக இந்த சீரீஸ் உருவாகியுள்ளது. இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்டாக்கிங் சமந்தா- Jiocinema, JioHotstar
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படம், 13 ஆண்டுகால துரத்தல், தொல்லை மற்றும் கடத்தல் சம்பவத்தை அச்சுறுத்தும் வகையில் வெளிக்கொணர்கிறது. இப்படம் ஜியோ சினிமா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அமர் பாஸ் - Zee5
தன் ஆபீசில் இண்டர்னாக தாயே வேலைக்குச் சேரும் போது, ஒரு பதிப்பக இளைஞரின் வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான சிக்கல்கள் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.
மா - Netflix
கணவர் மரணத்திற்குப் பிறகு மகளுடன் பூர்வீக கிராமத்துக்குச் செல்லும் ஒரு பெண் அங்கே பழமையான சாபமும் குடும்ப ரகசியங்களையும் எதிர்கொள்கிற படமாக உருவாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஷோதா - Zee5
பல வருடங்கள் காணாமல் போன மனைவி மீண்டும் வீடு திரும்பும் போது, அவள் உண்மையில் தன் மனைவியா என்ற சந்தேகத்தில் மனைவியை சோதிக்கும் கதையாக ஷோதா உருவாகியுள்ளது. ஷோதா ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பீஸ் மேக்கர் – சீசன் 2 - JioHotstar
DC யூனிவெர்ஸின் ஆட்டம் பாட்டம் நிறைந்த ஆன்டி-ஹீரோ மீண்டும் வந்துள்ளார். ஆக்ஷன், காமெடி, பைத்தியம் கலந்த மிஷன்களுடன் கூடிய சீசன் 2, ரசிகர்களை கவரப்போகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹரி ஹர வீர மல்லு - Amazon Prime
இந்த படம் ஒரு புரட்சியாளர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் காவியக் கள்ளனின் கதையைச் சொல்லுகிறது. இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.