இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

Published on
கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.
காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.
வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.
ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.
முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com