இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...!
வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் நீர் வராமல் இருக்க, அதை 10 நிமிடம் பிரிட்ஜில் வைத்து வெட்டுங்கள்.
மிளகாய் தூள் அதிகமாகிவிட்டால், சிறிது தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் காரம் சமநிலையாகும்.
தயிரை விரைவாக தயார் செய்ய, அதில் ஒரு மிளகாய் சேர்த்து வைத்தால் சீக்கிரம் பதனமடையும்.
சமையல் மேசையில் எறும்புகள் வராமல் இருக்க, சிறிது எலுமிச்சைச்சாறு தடவலாம்.
பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டாமல் கழுவ, சோப்புடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பாத்திரங்கள் பளிச்சிடும்.
இஞ்சி-பூண்டு விழுது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, அதில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் கலந்து பிரிட்ஜில் வைக்கலாம்.
தோசை மாவு விரைவாக புளிக்க, அதை குளிர்ச்சியான இடத்தில் வைக்காமல், லேசான சூடான இடத்தில் வைக்கவும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories