கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உட்கொள்ள வேண்டியவை!
நீராகாரம்:
இரவில் மீதமான சோற்றில் நீர் ஊற்றி வைத்து காலையில் நீரை வடித்து அத்துடன் சிறிது பழைய சாதத்தையும் சேர்த்து நன்கு மசித்து உப்பு, மோர், சின்ன வெங்காயம் சேர்த்து பருக உடலுக்கு குளிர்ச்சி தரும்.
கீரைகள்:
கீரை, முட்டைகோஸ், லெட்யூஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் அதிக நீர்சத்துக் கொண்டவை. இவை நம்மை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சாலட்கள், ஸ்மூத்திகள், ஜூஸ் என செய்து சாப்பிட உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
சீரகத் தண்ணீர்,வெந்தயத் தண்ணீர்:
சாதாரண தண்ணீருக்கு பதிலாக சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டிய தண்ணீரைப் பருகலாம். அதேபோல் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தை 1 கப் நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரைப் பருகிவர உடல் குளிர்ச்சி பெறும்.
வெள்ளரிக்காய்:
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. அதிக கலோரிகளற்ற பொட்டாசியம் சத்து நிறைந்தது.
வெள்ளரிக்காய்:
வியர்வை மூலம் இழக்கும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகின்றன. சாலட்கள், ஸ்மூத்திகளில் கலந்து, எலுமிச்சை இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரி ஜூஸாகவும் பருகலாம்.