கற்றாழையில் பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கின்றன.
கற்றாழைக்கு 'குமரி' என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதற்கு இளம் பெண் என்று பொருள். இதனை முறையாக பயன்படுத்தினால் பெண்களுக்கு இளமையும், ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தடை தொடர்புடைய பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் மருந்துகள் கற்றாழையில் தயாராகிறது. வேறு பல மருந்துகளும் இதில் தயாரிக்கப்படுகிறது.
கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை 'கிளைக்கோ புரோட்டின்' என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது.
இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது.
கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும்.
கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது.
அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.