பெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’....ஏற்படுத்தும் விளைவுகள்...
வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது.
இதனால் கால்களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சான் உருவாகும். இத்தகைய ‘பங்கஸ்’க்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த பகுதியில் காற்று பட வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
பெண்கள் கால் இடுக்குப் பகுதியில் ‘பங்கஸ்’ ஏற்படுவதை தவிர்க்க தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
பருத்தி இழைகள் சேர்த்தவைகளை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது.
குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. நரம்பு இறுக்கம், சரும பாதிப்பு, தசைவலி போன்றவை தோன்றும்.
பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இது பல்வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
எந்த வகையான ‘லெக்கிங்ஸ்’ ஆக இருந்தாலும் அதனை அடிக்கடி துவைத்து நன்றாக உலரவைத்து, அணிந்து கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத்திறனை பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும்.
வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்றவைகளை வாஷிங் மெஷின் அலசிய பின்பு, மீண்டும் வெளியே எடுத்து இருமுறை நன்றாக தண்ணீரில் அலசி, உலர வைத்து பயன்படுத்துங்கள்.