கடுக்காய் இலை பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்னைகளை குறைக்கிறது. இது வீக்கத்தையும் குறைக்கிறது.
கடுக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
கடுக்காய் சரும பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் தரத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது.
முகப்பரு, சொறி போன்ற தோல் நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
கடுக்காயில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெண்களின் கருவுறுதலையும் அதிகரிக்கிறது.
கண்களுக்கு நன்மை பயக்கும். கண் அழற்சி, வறண்ட கண்கள் மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் சிகிச்சைக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.