அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது- இந்திய வீராங்கனை ஜெமிமா
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
indiancricketteam
மகளிர் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.
indiancricketteam
127 ரன்கள் திரட்டி ஆட்டநாயகியாக ஜொலித்த இந்திய மிடில் வரிசை பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.
indiancricketteam
ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசுகையில், முதலில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லாம் கனவு போல் இருக்கிறது. இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே எனது எண்ணமாக இருந்தது.
indiancricketteam
கடந்த ஆண்டு உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த வலி இன்னும் மனதில் இருக்கிறது.
indiancricketteam
ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன். நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுப்பார்.
sachintendulkar
தன்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி என்றி கூறி ஜெமிமா ரோட்ரிக்ஸ் நெகிழ்ந்துள்ளார்.