சிறந்த கல்வியாளராகவும், நண்பராகவும் இருந்ததற்கு நன்றி ஆசிரியர்களே!
ஒரு நாட்டின் முன்னேற்றம், அதில் உள்ள ஆசிரியர்களின் தரத்தினால் தீர்மானிக்கப்படும்.
இந்தியாவில் ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவரும் புகழ்பெற்ற ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
சமூகத்தில் ஆசிரியர்களின் பங்களிப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
சமூகத்திற்கு ஆசிரியர்களின் பங்களிப்புகளையும் அவர்களை கௌரவிக்கும் நாளாகவும் இந்த நாள் அமைகிறது.
ஒரே நேரத்தில் ஒரு சிறந்த கல்வியாளராகவும், நண்பராகவும் இருந்ததற்கு நன்றி ஆசிரியர்களே!