'மண்டாடி' படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

'மண்டாடி' படத்தின் தெலுங்கு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Published on
மாமன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரி `மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.
மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் சூரி ஒரு மீனவனாக நடித்துள்ளார். மேலும் இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
சூரி இப்படத்தில் முத்துகாளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார் மேலும் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தெலுங்கு நடிகரான சுகாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இவர் இப்படத்தில் புலி கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார்.
படக்குழு தற்பொழுது தெலுங்கு மொழி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு மொழியில் சுகாஸ் கதாநாயகனாகவும், சூரி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com