மொச்சை, பயறு வகையை சார்ந்தது. இது தென்னிந்தியாவில்தான் அதிகம் பயிரிடப்படுகிறது.
மொச்சைக் காயில் இருந்து கிடைக்கும் முற்றிய விதைகளை மட்டுமே நாம் உணவுக்காக பயன்படுத்துகிறோம்.
மொச்சை செடியிலும் அதன் காய்களிலும் ஒரு வித நறுமணம் இருந்து கொண்டிருக்கும். இது வறட்சியை தாங்கிக்கொண்டு வளரும் தன்மைகொண்டது.
மொச்சையில் 18 முதல் 30 சதவீதம் வரை புரத சத்தும், 60 சதவீதம் மாவு சத்தும் உள்ளது. கனிம சத்துக்களும், கொழுப்பு மற்றும் நார்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கிறது.
மொச்சையில் டாலிகோசின் என்னும் பிரதான புரதசத்து உள்ளது. இது எளிதாக ஜீரணமாகும் தன்மை கொண்டது.
மொச்சையில் அதிகமாக இருக்கும் மாவு சத்தால் வயிற்றில் வாயு உருவாகும். இதை முளைவிடவைத்து பயன்படுத்தினால், வாயுதன்மை குறையும்.
மனச்சோர்வு மற்றும் பர்கின்சன் நோய்க்கு நிவாரணம் அளிக்கும். பெண்களின் கர்ப்ப கால குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
பச்சை மொச்சையில் வைட்டமின் 'சி' சத்து அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மொச்சை சீசன் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதமாகும். மொச்சை பயறைக் கொண்டு குழம்பு, கூட்டு மற்றும் பல்வேறு கிரேவி வகைகளை செய்யலாம்.