வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சியில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் நாள். வருமானம் உயரும்.குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் வளர்ச்சி கூடும்.
புதிய பாதை புலப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப்பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும். தொலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.
நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் செல்வாக்கு மேலோங்கும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
வாய்ப்புகள் வாயிற் கதவைத்தட்டும் நாள். குடும்பப் பெரியவர்க ளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
வளர்ச்சி கூடும் நாள்.வருமானம் உயரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். நட்பு வட்டம் விரிவடையும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கரை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.
வரவைக்காட்டிலும் செலவு கூடும் நாள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. மருத்துவச் செலவு உண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.