கேரட் ஊறுகாய் என்பது ஒரு பிரபலமான இந்திய ஊறுகாய் வகை. இது விரைவாகச் செய்யக்கூடியது மற்றும் சாலட், சாண்ட்விச் அல்லது சாதத்துடன் பரிமாறப்படலாம்.
மிக குறைந்த நேரத்தில் கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ, எலுமிச்சை பழம் - ஐந்து, பச்சை மிளகாய் - பத்து, பெருங்காயம் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி, கடுகு - ஒரு தேகரண்டி, உப்பு - தேவைகேற்ப, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை நன்றாக துருவிக்கொள்ளவும், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும். சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.